சாக்கடை நீரால் மக்கள் கடும் அவதி

ராமநாதபுரம். ஜன.29: ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் பல நாட்களாக குளம் போல் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி கடும் சுகாதார சீர்கேடடை ஏற்படுத்தி வருகிறது. நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியான இளங்கோவடிகள் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பாதசாரிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், அவ்வப்போது சரி செய்து விட்டு செல்கின்றனர். நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலை உள்ளதாகவும், குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக அந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி சரி செய்ய வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: