தண்ணீர் கேன் போடும் நபரின் பற்களை உடைத்த அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை

பெரம்பூர், ஜன.29: கொளத்தூர் அரிதாஸ் 2வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(49), கடைகளுக்கு தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த அரி கிருஷ்ணன்(40) என்பவர் நடத்தி வரும் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மார்க் பாரில் தண்ணீர் கேன் விற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தண்ணீர் கேன் போட்டுவிடடு பாரில் இருந்த அரிகிருஷ்ணனிடம் தண்ணீர் கேன் விற்றதற்கான நிலுவைத் தொகை ரூ.9,800 கேட்டுள்ளார்.அப்போது, அரி கிருஷ்ணன் அடிக்கடி ஏன் பணம் கேட்கிறீர்கள்? நான் பணம் தர மாட்டேனா, என்று கூறி சரவணன் முகத்தில் ஓங்கி அடித்தார். இதில் சரவணன் 5 பற்கள் உடைந்து காயமடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அதிமுக 45வது வட்ட செயலாளர் அரி கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Related Stories: