டூவீலர்களில் மிரட்டும் ஹாரன் சத்தம்

தொண்டி, ஜன.29: தொண்டி பகுதியில் டூவீலர் மற்றும் வாகனங்களில் விதிமுறை மீறிய ஹாரன்கள் பயன் படுத்தப்படுகிறது. பட்டாசு சத்தம் போல் இருக்கும் ஹாரன்களால் பொதுமக்களை அச்சம் அடைகின்றனர். சிறுவர்கள் வாகனம் ஒட்டுவது, விதிமுறை தெரியாமல் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்ற போலிசார் கூறியும் ஏற்றுக் கொண்டதாக இல்லை. நாய் குறைப்பது, குழந்தை அழுவது, ஆம்புலன்ஸ் சப்தம், வெடிச்சத்தம் உள்ளிட்ட பலவித ஒலிகளில் ஹாரன் வைத்திருப்பது, முகப்புலைட் ஒளி அளவை மாற்றுவது என விதிகளை மீறி செயல்படுகின்றனர். இவற்றை தவிர்த்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, டூவீலரில் அதிக சப்தம் எமுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சக ஓட்டுனர்கள் பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: