திருவிடைமருதூர், ஜன.28: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர் முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதல்வர் பதக்கம் தஞ்சாவூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது. இவருக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
