தஞ்சாவூர், ஜன.28: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி 9வது வார்டுக்குட்பட்ட காணியாளர் மேலத்தெரு, வாத்தலை தோப்பு தெற்குவீதி, தெற்கு மடவிளாகம், கபிஸ்தலம் சாலை ஆகிய பகுதிகளில் தூய்மை பணி முகாம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் நடந்த பணிகளில், அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து சுண்ணாம்பு நீர் தெளிக்கப்பட்டு செடி, கொடிகள், முட்புதர்கள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
