வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

புதுக்கோட்டை, ஜன. 28: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் செயல்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 1800 பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இந்தப் போராட்டம் காரணமாக 100 கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனை பாதிப்பு ஏற்படும் என்றும் தங்களது கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றாத பட்சத்தில் சங்கத்தின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என போராட்ட கார்ரகள் தெரிவித்தனர்.

 

Related Stories: