பொன்னமராவதி, ஜன. 28: பொன்னமராவதி அலுவலர் மனமகிழ் மன்றத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். துணைத்தலைவர் குருபெருமாள், செயலாளர் தியாகராஜன், துணைச்செயலாளர் பொன்னுச்சாமி என்ற கிட்டு, பொருளாளர் ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பழனியப்பன் வரவேற்றார். காலையில் தேசிய கொடியேற்றப்பட்டது.
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் கதிரேசன் குடியரசை காப்பதே குடிமகனின் குறிக்கோள் என்ற தலைப்பில் பேசினார். கருப்பையா வாழ்த்துரை வழங்கி பேசினார். சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பார்த்தசாரதி கௌரவிக்கப்பட்டார். வெங்கட்ராமன் தொகுத்து வழங்கினார். இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
