தர்மபுரி, ஜன.28: தர்மபுரியில், அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் வட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் முருக.மாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் பழனிசாமி, துணை தலைவர்கள் மோகன்ராஜ், கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850ம் வழங்கவேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்சன் வழங்க வேண்டும். கம்யூடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த முனிராஜ், மாதையன், மாணிக்கம், சுப்ரமணி, நாகராஜன், மனோகரன், வட்ட பொருளாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- அரசு
- தர்மபுரி
- அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்
- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம்
- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
