புதுக்கோட்டையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தின பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.26: புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குத்தாலம் அன்பழகன், தலைமைக் கழகப் பேச்சாளர் துரை தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பொதுக்கூட்டத்தில், மருத்துவர் அணி இணைச் செயலர் அண்ணாமலை ரகுபதி, மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, தெற்கு நகர பொறுப்பாளர் ராஜேஷ் நெசவாளர் அணிச் செயலர் எம்.எம். பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இளையசூரியன் வரவேற்றார். முடிவில் மாணவரணி துணை அமைப்பாளர் தெய்வானை நன்றி கூறினார்.

 

Related Stories: