பழனி பாதயாத்திரைக்குழு அன்னதானம்

பொன்னமராவதி,ஜன.26: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி சின்னக்களத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் பழனிபாதயாத்திரைக்குழு சார்பில் சிறப்பு பஜனைகள் பாடப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அன்னதான விழா நடைபெற்றது.

இதில் வலையபட்டி, பொன்னமராவதி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்க பொதுமக்கள் பங்குபெற்றனர். இதே போல மைலாப்பூர், செம்மலாபட்டி உட்பட பல்வேறு இடங்களில் பழனி பாதயாத்திரைக்குழு சார்பில் பஜனைகள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழாக்கள் நடைபெற்றது.

 

Related Stories: