மேலைச்சிவபுரியில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா

பொன்னமராவதி,ஜன.26: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் வட்டார அளவிலான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா தொடக்க விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியில் வட்டார அளவிலான முதலமைச்சர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026 போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இந்த போட்டிக்கு ஒன்றிய ஆணையர் கண்ணன் தலைமைவகித்தார். கிராமஊராட்சி ஆணையர் அபிராமசுந்தரி முன்னிலைவகித்தார்.

கல்லூரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார். திமுக ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி விளையாட்டுப்போட்டிகளை தொடங்கிவைத்தார். இதில் முன்னாள் ஊராட்சித்தலைவர் மீனாள்அயோத்திராஜா, முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர் விஜயாமணி, திமுக இளைஞரணி மாவட்டதுணை அமைப்பாளர் இளையராஜா, திமுக நிர்வாகிகள், மண்டலதுணை ஆணையர்கள், துணைஆணையர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், விளையாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: