சென்னை: தமிழ்நாட்ட இதற்கு முன்னாடி ஆண்டவங்க, பாஜவுக்கு அடிமையாகத்தான் இருந்திருக்காங்க. ஊழலுக்காக நேரடியா சரண்டரானவங்க. அவங்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை என அதிமுகவை கடுமையாக தாக்கி தவெக தலைவர் விஜய் பேசினார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையொட்டியுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநில, மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய் சொகுசு காரில் கூட்ட அரங்குக்கு வந்தார்.
தவெக விற்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் விஜய் பேசியதாவது: நம்மளுடைய இந்த அரசியல் பயணத்தில் மிக, மிக முக்கியமான ஒரு காலகட்டத்துல நாம் இருக்கிறோம். நான், ஏன் இதை இவ்வளவு அழுத்தமா சொல்கிறேன் அப்படின்னா, ஏதாவது அழுத்தம் இருக்குமோனு நினைக்கிறீங்களோ? அழுத்தமா நமக்கா? இந்த அழுத்தத்துக்கெல்லாம் அடங்கிப்போற ஆளா இந்த ஆளு? இந்த, மூஞ்சியப் பார்த்தா அப்படியா தெரியுது உங்களுக்கு. அதனால, அப்படி எல்லாம் நடக்காது.
அதுவும், முக்கியமா நம்மகிட்ட அது எல்லாம் நடக்கவே நடக்காது. ஆனா, அழுத்தம் இருக்குதான்னு கேட்டீங்கன்னா கண்டிப்பாக இருக்கிறது. நமக்கு இல்ல, மக்களுக்கு. தமிழ்நாட்டில், இதற்கு முன்னாடி ஆண்டவங்களும் சரி, பாஜவுக்கு அடிமையாகத்தான் இருந்திருக்காங்க. ஊழலுக்காக நேரடியா சரண்டரானவங்க. அவங்களை, நம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறமும் சரி, ஒன்னே ஒன்னு சொல்றேன்.
எழுதி, வச்சுக்கோங்க. இதுக்கு, முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இல்ல இப்ப இருக்கிறவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசா தொடமாட்டேன். எனக்கு அது அவசியமே இல்ல, புரிஞ்சுக்கிட்டீங்களா? எனக்கு அதை தொட வேண்டிய அவசியமே இல்ல. ஒரு துளி ஊழல் கரை கூட படியவே படியாது. படியவும் விடமாட்டேன். நீங்க கேட்கலாம், இது என்ன சினிமாவா? இது என்ன முதல்வன் படமா? ஒரே நாள்ல வந்து இவர் எல்லாத்தையும் கிளீன் பண்ணிருவாரா?”ன்னு நீங்க கேட்கலாம்.
ஓகே, பிராக்டிகலா அது பாசிபில் இல்லதான். இப்படி, எதுக்குமே ஆசைப்படாத ஒருத்தன் அரசியலுக்கு வர்றான். அப்படினா, அவன் கண்ணு முன்னாடி ஏதாவது ஒரு தப்பு நடக்குது அப்படின்னா, அவன் கண்ணு முன்னாடி ஏதாவது இந்த மாதிரி ஒரு ஊழல் நடக்குது அப்படின்னா, அதைப் பார்த்துக்கிட்டு அவன் சும்மா இருப்பான்னு நினைக்கிறீங்க? என்ன சூழ்ச்சி நம்ம மேல பண்ணாலும், என்ன அழுத்தம் நீங்க கொடுத்தாலும், இந்த அடங்கி போறதுக்கோ, இந்த அண்டிப் பொழைக்குறதுக்கோ இல்ல இந்த அடிமையா இருக்கிறத்துக்கோ நாம அரசியலுக்கு வரல.
எல்லோரும் உண்மையா உழைப்பீங்களா? யாருக்காகவும், எதுக்காகவும் நம்மளோட அரசியல்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே கூடாது, செய்வீங்களா? தயவு செஞ்சு எல்லோரும் கொஞ்சம் ஒற்றுமையா இருந்து, உழைச்சு ஜெயிப்பீங்களா? நமக்காக, நம்ம மக்கள் கண்டிப்பா ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க.
விஜய் கூட கூட நிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. அதனால, அப்படி முடிவு பண்ண அவங்கள பாதுகாப்பா பூத்துக்கு கூட்டிட்டு வாங்க. நம்மளோட, இந்த விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க. உங்களோட நான் இருக்கேன். நம்மளோட, நம்ம மக்கள் இருக்கிறாங்க. இதுக்கு மேல என்ன வேணும்? கான்ஃபிடெண்டா இருங்க, நல்லதே நடக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
