சீமானுக்கு கொலை மிரட்டல் விஜய் கட்சி நிர்வாகி மீது வழக்கு

தேனி: சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து முகநூலில் பதிவு செய்த விஜய் கட்சியின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி கருவேலநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் லெப்ட் பாண்டி (எ) பாண்டியன். தேனி தெற்கு மாவட்ட தவெக மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இவரது முகநூலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் பற்றி ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேனி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ஜெயக்குமார், தேனி காவல் நிலையத்தில் லெப்ட் பாண்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தார். அதன்பேரில், தேனி போலீசார், லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: