இருளில் அவதிப்படும் மக்கள்

கீழக்கரை,ஜன.24: கீழக்கரை அருகே தெரு விளக்குகளின்றி 60 குடும்ப மக்கள் இருளில் அவதியடைந்து வருகின்றனர். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன. இதுகுறித்து திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரியின் கவனத்திற்கு 10 நாட்களுக்கு முன் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இது நாள் வரை துளியளவும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இருளில் அவதியடைந்து வரும் மக்களின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: