திருவாரூர்,ஜன.23:100 நாள் வேலை எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரினை மாற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டித்தும் இந்த திட்டத்திற்கு மீண்டும் பழைய பெயரினை வைக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தினை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலை புரட்சி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவனர் சித்தாடி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
