சத்துணவு ஊழியர்கள் கைது

சிவகங்கை,ஜன.21: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ரூ.9000 குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை மையங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாகராணி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரேவதி வரவேற்றார். மாநிலச்செயலர் பாண்டி தொடக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் லதா பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் போராட்டத்தை ஆதரித்து பேசினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 603 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: