காரைக்குடி, ஜன.8: காரைக்குடி தேவகோட்டை பைபாஸ் சாலையில் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்னர் 180 ஏக்கரில் சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்பட்டது. இதில் 32 சிறு, குறு தொழில்களுக்கு அரசு சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இங்கு 12 தொழில்கள் மட்டும் நடந்துவருகிறது. இங்கு தொழில் துவங்குபவர்களுக்கான அரசு மானியம், மின் இணைப்பில் முன்னுரிமை, வரிச்சலுகை உள்பட பல்வேறு சலுகைகள் சரிவர கிடைப்பது இல்லை. அதேபோல் தொழில்நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாத நிலையே உள்ளது. எனவே இங்கு போர் அமைத்து தர வேண்டும். தவிர சோலர் பிளான்ட் அமைத்து அதன் மூலம் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரம் வழங்கலாம் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
