நடிகர் திலீப்பின் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் திலீப்பின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய தீர்மானித்திருப்பதால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கூடாது என்று அரசு வழக்கறிஞர் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பாஸ்போர்ட்டை திலீப்பிடம் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.

Related Stories: