கொலிஜியம் பரிந்துரை 5 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூடி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் குப்தாவை, உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி பி மோஹிதே டேரே மேகாலயாவுக்கும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். சோனக், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கும், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஏ முஹம்மது முஸ்தாக், சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத்திற்கும், ஒரிசாவைச் சேர்ந்த நீதிபதி சங்கம்குமார் சாஹூ, பாட்னா உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயர்வு செய்ய பாிந்துரை செய்துள்ளது. மேலும் மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சௌமென் சென், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Related Stories: