தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஏழை கைதிகளுக்கு ஆதரவளிக்கும் உள்துறை அமைச்சகத்தின் நிதியுதவி திட்டம், தீவிரவாத செயல்கள், வரதட்சணை மரணங்கள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் விசாரணையை எதிர்கொள்ளும் கைதிகளுக்கு கிடைக்காது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியால் ஜாமீன் அல்லது அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் வாடும் ஏழை கைதிகளுக்கு உதவ ஏழை கைதிகள் ஆதரவு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் படி ஒரு கைதிக்கு ஜாமீன் பெற ரூ.40,000 வரை அபராதம் செலுத்த ரூ.25,000 வரை நிதியுதவி அளிக்கப்படும். ஒன்றிய அரசு மாநிலங்கள்,யூனியன் பிரதேசத்துக்கு நிதி அளிக்கிறது. அவர்கள் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஏழை கைதிகள் ஆதரவு திட்டத்தில் திருத்தப்பட்ட வழிக்காட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிரவாத செயல்கள், வரதட்சணை மரணங்கள், பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், போக்சோ சட்டத்தின் கீழான கொடூரமான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த நிதியுதவி திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஊழல் தடுப்பு சட்டம்,பண மோசடி தடுப்பு சட்டம்,போதை பொருள் கடத்தல்,தீவிரவாத தடுப்பு சட்டம்(உபா) போன்ற குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் பல குற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: