வெறுப்பு பேச்சு தடை மசோதா கர்நாடக பேரவையில் நிறைவேற்றம்

பெங்களூரு: கர்நாடக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த வாரம் இதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் தாக்கல் செய்து அதன் சாதக பாதகத்தை விவரித்து உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். ஆனால், பாஜவினர் இதை ஏற்கவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடந்தது.

பின்னர், சபாநாயகர் யுடி காதரிடம் வெறுப்பு பேச்சு தடை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் வேண்டுகோள் விடுத்தார். அதே நேரம் எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டம் 19 உள்பிரிவு 1க்கு இது எதிரானது என கூறி இதற்கு நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம் என எதிர்ப்பை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே குரல் வாக்கெடுப்பில் , வெறுப்பு பேச்சு தடை சட்ட மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் யுடி காதர் அறிவித்தார்.

Related Stories: