தூத்துக்குடி, டிச. 17: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் தினகரன் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் இணைந்து அழகு குடில் போட்டியை நடத்துகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பை தெரிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் விதவிதமான குடில்கள் அமைத்து, அதில் மின்விளக்குகளால் அலங்கரித்தும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறுகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தினகரன் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி நிறுவனம் இணைந்து இந்த ஆண்டு அழகு குடில் என்ற போட்டியை நடத்துகிறது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குபெறலாம். போட்டியில் பங்கு பெற விரும்பவர்கள் தங்கள் வீடுகளில் அமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடிலை போட்டோ மற்றும் 1 நிமிட வீடியோவாக எடுத்து அதனை 85083 89491 மற்றும் 96770 24466 ஆகிய வாட்ஸ்அப் எண்ணிற்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதில், தங்களின் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். நடுவர்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து குடிலை பார்வையிட்ட பின்பு முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் வரும் 100 குடில் வீடியோக்கள் மட்டுமே போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும் என தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
