சபரிமலை சீசனால் இறைச்சி விற்பனை டல்

தேவாரம், டிச. 15: தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், உள்ளிட்ட ஊர்களில் அதிகமான அளவில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் இங்குள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது. கிராமங்களை சுற்றி வளர்க்கப்படும் ஆடுகள் அனைத்தும் தினந்தோறும் தேவாரம், உத்தமபாளையம், கோம்பை, கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இதனால் ஆடுகள் விற்பனை எப்போதும் களைகட்டி காணப்படும். எப்போதும், சபரிமலை சீசன் என அழைக்கப்படும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஆட்டு இறைச்சி விற்பனை 10% ஆக குறைந்து விடும். இந்த நிலை ஜனவரி வரை நீடிக்கும். ஆனால், இந்த முறை 50% மேலாக விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆடு வளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: