மானாமதுரை, டிச.15: மானாமதுரை அன்னவாசல் விலக்கு ரோடு அருகே கட்டுமானங்களுக்கு தேவைப்படும் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த 4ம் தேதி பின்பக்கத்தை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் கல்லாவில் சில்லறை நோட்டுகளை தவிர வேறு ஏதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்தார். பின்னர் சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்வோம் என நினைத்து கம்ப்யூட்டரில் இருந்த ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றார்.
அவர் திருடிய ஹார்ட் டிஸ்க் வரவு செலவுக்கானது என்பதாலும் சிசிடிவி கேமரா பதிவாகும் ஹார்ட் டிஸ்க் வேறொரு கம்ப்யூட்டரில் பதிவானது என்பதால் அவரது முகம் அதில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகண்ணனூரை சேர்ந்த ராமசாமி மகன் ராஜசேகர்(35) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஹார்ட் டிஸ்க்ஐ பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
