திருவிடைமருதூர், டிச.15: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் பேரூராட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 16 லட்சம் மதிப்பீட்டில் கோயில் சன்னாபுரம் வடக்கு தெருவில் சமுதாயக்கூடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூட்ட அரங்கம், வடக்கு தெருவில் சமுதாய கழிவறை, கோயில் சன்னாபுரம் தெற்கு தெருவில் சமுதாய கழிவறை, வடக்கு பாலக்கார தெருவில் சமுதாயக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பீட்டிலான கட்டிடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், திருவிடைமருதூர் பேரூராட்சி பெருந்தலைவர் புனித மயில்வாகனன், துணை பெருந்தலைவர் சுந்தர ஜெயபால் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை, இளநிலை பொறியாளர் குமரேசன், கவுன்சிலர்கள் ஆரோக்கியதாஸ், பானுப்பிரியா, செந்தமிழ்செல்வன், ராதா, பத்மா, ராஜேஸ்வரி, கலியமூர்த்தி, கனிமொழி, ரகுபதி, சின்னையன், ஹேமநாதன், அபிநயா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
