செங்கம், டிச. 3: செங்கம் புறவழி சாலை மற்றும் புதுச்சேரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீபத் திருவிழா நடைபெறும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அவசியம் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் தினகரன் நாளில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று சென்னை பயிற்சி காவலர்கள் எஸ்பி சுரேஷ்குமார் செங்கம் நகரம் மற்றும் புறவழி சாலை மண்மலை பக்கிரி பாளையம் செங்கம் போளூர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அப்போது செங்கம் டிஎஸ்பி ராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
