கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நவீன பத்திரப்பதிவு அலுவலகம்

 

கும்பகோணம், அக். 29: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் எப்போது திறக்கப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக கும்பகோணம் அருகே சுவாமிமலையில் குளிரூட்டப்பட்ட மற்றும் லிஃப்ட் வசதியுடன் சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகள் கொண்ட பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் வந்து செல்வதற்கும், லிஃப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1880ம் ஆண்டு சுவாமிமலையில் துவங்கப்பட்டது.

Related Stories: