குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் உலக தற்கொலை தின விழிப்புணர்வு

 

தஞ்சாவூர், செப்.24: குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழுவின் சார்பில் உலக தற்கொலை நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வரும் முனைவருமான ரோசி தலைமை வகித்தார். தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் இந்திராகாந்தி வரவேற்புரை வழங்கினார். வணிகவியல் துறைத் தலைவரும் முனைவருமான முத்தமிழ்த் திருமகள் நோக்க உரையை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தஞ்சை கிருஷ்ணா மருத்துவமனை மனநல ஆலோசகர் சுபத்ரா விழிப்புணர்வு வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் கண்ணம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை இந்திராகாந்தி, முத்தமிழ் திருமகள், தேன்மொழி, கண்ணம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related Stories: