₹52 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒடுகத்தூர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி

வேலூர், ஜூன் 27: ஒடுகத்தூர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ₹52 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 பேர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மற்றும் அவருடைய மகன் ரமேஷ் இவர்களிடம் மாதாந்திர ஏலச்சீட்டு கட்டி வந்தோம். மொத்தம் ₹52 லட்சத்து 57 ஆயிரத்து 800 தர வேண்டும். இந்த பணத்தை எங்களுக்கு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இது சம்மந்தமாக கடந்த ஆண்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தோம். அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரமேஷ் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ரமேஷ் எங்களுக்கு கடந்த டிசம்பர் 15ம் தேதிக்குள் பாதி பணத்தை கொடுப்பதாக ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் அந்த காலஅவகாசத்தில் பணத்தை கொடுக்கவில்லை. அவர் தொடர்ந்து ஏமாற்றி கொண்டு வந்தார். பொருளாதார குற்றப்பிரிவினர் இந்த வழக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க உகந்தது அல்ல என்று கூறிவிட்டனர். நாங்கள் மீண்டும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தோம். எஸ்பி எங்கள் புகாரை மாவட்ட குற்றப்பிரிவிற்க்கு நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தார். நாங்கள் மீண்டும் ஜனவரி மாதம் விசாரணைக்கு நாங்களும் சென்றிருந்தோம். அன்று எங்களுக்கு ரமேஷ் பாதிபணத்தை மீண்டும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் தருவதாக ஒப்புக்கொண்டு எழுத்து மூலமாக எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அவர் அந்த குறிப்பிட்ட காலஅவகாசத்தில் பணம் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவில் கேட்டபோது, ரமேஷ் தலைமறவாக உள்ளார். அவர் எழுதிக்கொடுத்த எழுத்து மூல விண்ணப்பத்திலும் போலியான முகவரி கொடுத்துளார். செல்போன் நெம்பரும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார் என கூறிவிட்டனர். எனவே அவர் எங்கு குடியிருக்கிறார் என கண்டுபிடித்து வாருங்கள் என்று கூறிவிட்டனர். நாங்கள் பல இடங்களில் தேடி அவர் முகவரியை கண்டுபிடித்தோம். ஒடுகத்தூரில் வசித்து இரவோடு இரவாக வீடு காலிசெய்துவிட்டு சென்றவர் தற்போது இரண்டு மாதகாலமாக வேலூரில் இருக்கிறார். இந்த முகவரியை மாவட்ட குற்றப்பிரிவிற்க்கு தெரிவித்தோம். அவர்களும் விசாரனை செய்கிறோம் என்றார்கள். ஆனால் இதுவரை முறையாக எந்த விசாரணையும் இருவரிடமும் நடத்தவில்லை. எனவே எங்களை பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post ₹52 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒடுகத்தூர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி appeared first on Dinakaran.

Related Stories: