ரயில்ேவ மேம்பாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு காட்டி விபத்தில் சிக்கும் இளைஞர்கள் வேலூர் கஸ்பா

வேலூர், ஜூன் 25: வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் விபத்தில் சிக்குவது மட்டுமின்றி, சாகசம் செய்யும் இவர்களால் பள்ளி மாணவிகளும், பெண்களும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. லூர் ரவுண்டானாவில் இருந்து கஸ்பா வரை செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே லெவல் கிராசிங் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்து இருந்தது. இந்த ரயில்வே லெவல் கிராசிங்கால் அப்பகுதியில் பல நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் குறுகிய உயரம் கொண்டுள்ளது. அதோடு வளைந்து வசந்தபுரம் சாலையில் இறங்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இயற்கையாகவே வேகத்துடனும், கவனக்குறைவுடனும் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியாத வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது.

இப்பாலத்தை ஒட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமின்றி, அப்பகுதியில் 3 மேல்நிலைப்பள்ளிகளும், ஒரு உயர்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. அதோடு இந்த சாலை சதுப்பேரி, சிறுகாஞ்சி, ஆர்என்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வேலூர் நகர் வரும் பிரதான சாலையாகவும் விளங்கி வருகிறது. இதனால் காலை, மாலை வேளைகளில் அதிக நெரிசலுடன் இந்த சாலை விளங்குகிறது.இந்த நிலையில், அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமின்றி, ஈவேரா, வேலப்பாடி விவிகேம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் கஸ்பா, வசந்தபுரம், ஆர்என்பாளையம், சதுப்பேரி, சிறுகாஞ்சி பகுதிகளை சேர்ந்த மாணவிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடு திரும்பும்போது அவர்களின் கவனத்தை கவருவதற்காக இளைஞர்கள் தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு ஈடுபடும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைவது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நேற்றும் இதுபோல் சாகசம் நிகழ்த்திய இரண்டு பைக் இளைஞர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் நடந்தது. இவர்களின் இந்த அலம்பல்களால் மாணவிகள் மட்டுமின்றி அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.அதேபோல் இரவு நேரங்களில் போதையில் இந்த மேம்பாலத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி மரணமடைவதும், காயமடைவதும் தொடர்ந்து வருகிறது. எனவே, இந்த மேம்பாலத்தில் காலை, மாலை மட்டுமின்றி இரவு நேரங்களிலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரயில்ேவ மேம்பாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு காட்டி விபத்தில் சிக்கும் இளைஞர்கள் வேலூர் கஸ்பா appeared first on Dinakaran.

Related Stories: