கிப்ட் பார்சலில் நகை, வெளிநாட்டு பணம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வாட்ஸ்அப், டெலிகிராமில் பேசி

வேலூர், ஜூன் 26: வாட்ஸ்அப், டெலிகிராமில் பேசி கிப்ட் பார்சலில் நகை, வெளிநாட்டு பணம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி நடக்கிறது. இதில் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் புதுபுது முறைகளில் பொதுமக்களை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டு சைபர் கிரைம் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் இருப்பது போல சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் நட்பாகப் பழகி, பின்னர் கிப்ட் பார்சல் அனுப்பி இருப்பதாக கூறி, லட்ச கணக்கில் ஏமாற்றி வருகின்றனர். இதில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா கூறியதாவது: வீட்டில் இருக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராமில் வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வரும். அதில் பேசும் நபர் ரெம்பப தெரிந்தவர் மாதிரியும், பழைய நண்பர் மாதிரியும் ஒரு 10 நாட்கள் பேசுவார்கள். பின்னர் உங்களுக்கு நான் நகை மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அதற்கு ஒரு அத்தாட்சியாக மங்கலாக இருக்கும்ஒரு கூரியர் பில்லையும் பார்சலில் பணம் நகை இருப்பது போன்ற படத்தையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைப்பார்கள்.

அதற்கு ஏற்றமாதிரி கூரியர் கம்பெனியில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு அதில் வெளிநாட்டு பணம் நகை உள்ளது, ஆனால் அதற்கு வேண்டிய ஜிஎஸ்டி கட்டவில்லை. அதை கட்டி பார்சலை எடுத்துக்கொள்ளுங்கள் என்று தகவல் தெரிவிப்பார்கள். நீங்கள், அந்த வெளிநாட்டு நபரை தொடர்பு கொண்டால் ஆமாம் மறந்துட்டேன் அந்த பணத்தை கட்டி பார்சலை பெற்று கொள்ளப்படி கூறுவர். ₹4 முதல் ₹7 லட்சம் வரை கூரியர் நிறுவனம் என்று பேசிய நபரின் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிய பிறகு அவர்கள் வெளிநாட்டில் இருந்து பர்சலில் பணம் பெறுவது சட்டவிரோதம் இதற்காக இன்னும் பணம் கட்ட வேண்டும் என மேலும் பல லட்சத்தை பறிப்பார்கள். நீங்கள் கட்டிய பணம் வெளிநாட்டில் இருக்கும் நபரின் கையில் கொண்டு சேறும் வரையில் வெளிநாட்டுகாரர் மற்றும் கூரியர் நிறுவனம் என்று பேசியவர்களின் நம்பர் செயலில் இருக்கும் அதன் பின் அந்த நம்பர்கள் செயல்படாது. தற்போது இது போன்ற மோசடிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கிப்ட் பார்சலில் நகை, வெளிநாட்டு பணம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வாட்ஸ்அப், டெலிகிராமில் பேசி appeared first on Dinakaran.

Related Stories: