கோப்புகளில் ஆங்கிலம் இடம் பெறக் கூடாது தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அறிவுரை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு

அணைக்கட்டு, ஜூன் 28: அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஆய்வு செய்து கோப்புகளில் ஆங்கிலம் இடம் பெறக் கூடாது என அறிவுரை வழங்கினார். அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று தமிழ் வளர்ச்சித் துறை வேலூர் மாவட்ட துணை இயக்குனர் நாகராஜன் திடீர் ஆய்வு செய்தார். அதன்படி அலுவலகத்தில் இருந்த பதிவேடுகள், பயன்பாட்டில் உள்ள கோப்புகள், பணிபுரியும் அலுவலர்களின் வருகை பதிவேடுகளையும் தீவிரமாக ஆய்வு செய்தார். அதில் அனைத்தும் தமிழில் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வருவாய்த் துறையில் பணியாற்றக்கூடிய விஏஓக்கள் முதல் தாசில்தார்கள் வரை அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும், கோப்புகளில் எக்காரணம் கொண்டும் ஆங்கிலம் இடம் பெறக் கூடாது. மேலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை விசாரித்து அதுகுறித்த அறிக்கையை அனுப்பும்போது ஆங்கிலம் இடம் பெறாமல் தமிழிலே டைப் செய்து பின்பு அதனை சரிபார்த்து தமிழிலே கையெழுத்திட்டு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கோப்புகளில் ஆங்கிலம் இடம் பெறக் கூடாது தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அறிவுரை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: