பிடிஓ அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹2.70 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், ஜூன் 27: பிடிஓ அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹2.70 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு முகாம் நடந்தது. எஸ்.பி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஏடிஎஸ்பி பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் குடியாத்தத்தை சேர்ந்த பிரகாசம் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மகள் டிப்ளோமோ இஇஇ படித்துள்ளார். எனது மகளுக்கு குடியாத்தம் பிடிஓ அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி குடியாத்தம் கொத்தமாரி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் கூறினார். நானும் அதை நம்பி அவரிடம் ₹2 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் எனது மகளுக்கு பிடிஓ அலுவலகத்தில் வேலை வாங்கி தரவில்லை. நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பணம் கேட்டால் பணத்தை தர முடியாது என்று கூறி மிரட்டுகிறார். எனனே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு எஸ்.பி மணிவண்ணன் அறிவுறுத்தினார். மேலும் நிலுவையில் உள்ள ஒவ்வொரு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

The post பிடிஓ அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹2.70 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: