வர்த்தகப் பேச்சு; அமெரிக்க குழுவினர் ஜூன் 1ல் இந்தியா வருகை

 

புதுடெல்லி: இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்ய அமெரிக்க குழு ஜூன் 1ல் இந்தியா வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பிப்.7 அன்று இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்யவும், சந்தை அணுகல், வரியல்லாத நடவடிக்கைகள் மற்றும் சுங்க நடைமுறை எளிதாக்கம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கக் குழு ஜூன் 1 முதல் 4 வரை இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

Related Stories: