சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான விடைத்தாள் வெளியீடு

 

புதுடெல்லி: அரசு பணியாளர் தேர்வாணையம் 2026ம் ஆண்டு சிவில் சேவைகள் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி மற்றும் இந்திய காவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக தேர்வாணையத்தால் சிவில் சர்வீஸ் தேர்வு ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றது. இந்த ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு கடந்த 24ம் தேதி இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 5.49லட்சம் பேர் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை நேற்று வெளியிட்டது. முதல்நிலை தேர்வு நிறைவடைந்த உடனேயே தேர்வாணையத்தால் தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். தேர்வர்கள் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் மே 31ம் தேதி மாலை 6 மணிக்குள் பிரத்யேக இணைய தளம் மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: