மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு, சிபிஎஸ்இக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கல்வி அமர்வு முதல் ‘மும்மொழி வழிக்கொள்கை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அகில இந்திய அளவில் இது ஒரு இரு பிராந்திய மொழி படிக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,‘‘மொழி என்பது ஒரு விருப்பத் தேர்வு ஆகும், ஆனால் தற்போது, இந்த அறிக்கையால் அரசியலமைப்பு வழங்கியுள்ள கூட்டாட்சி மற்றும் விருப்ப முடிவுகள் விவகாரத்தில்பிரச்சறை எழுந்துள்ளது என கூறினார். இதைத் தொடர்ந்து குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூரியகாந்த், கூடுதலாக பிராந்திய மொழிகள் கற்பிப்பது தொடர்பான விவகாரத்தில் ஒரு விரிவான விளக்கமடங்கிய பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் .எனவே இந்த வழக்கை ஜூன் 15ம் தேதி விசாரிக்கலாம் என கூறினார்..அப்போது பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன இறுதி முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆறு முதல்முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு பிராந்திய மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சி.பி.எஸ்.சி.யின் சுற்றறிக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு, மற்றும் சிபிஎஸ்சி நிர்வாகம், என்.சி. இ. ஆர். டி பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Related Stories: