உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ரேடாரில் சிக்காத 5ம் தலைமுறை போர் விமான திட்டம் தொடக்கம்

 

புதுடெல்லி: அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனம் தயாரித்த தேஜஸ் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானமாகும். இலகுர போர் விமானமான தேஜஸ் வான்வழி போர் மற்றும் தாக்குதல் மற்றும் வான்வழி ஆதரவு பணிகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 5ம் தலைமை ஸ்டெல்த் போர் விமானமாகும்.

இது விமானப்படை, கடற்படைக்கென பல்திறன் போர் விமானமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை தொடங்கும் விதமாக அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதற்கான தனியார் கூட்டாளரை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் பாரத் போர்ஜ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு முன்மொழிவுக்கான கோரிக்கையை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.

Related Stories: