69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

 

புதுடெல்லி: தமிழகத்தில் 69சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதால் மருத்துவ கலந்தாய்வின் போது ஓசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை இதனால், இடஒதுக்கீட்டை 50சதவீதமாக குறைக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்த வழக்கை கடந்த 1ம் தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையை சேர்ந்த சஞ்சனா, அகிலா ஆகிய இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பை முடித்துவிட்டனர்.

எனவே ரிட் மனு என்பது காலாவதி ஆகிவிட்டது. மேலும் இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்ப மனுதாரர்களுக்கு தற்போது எந்தவித தகுதியும் இல்லை. இருப்பினும் சட்டங்கள் தொடர்பான கதவுகள் மனுதாரர்களுக்கு எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: