பசுவந்தனை அருகே பைக் மீது கார் மோதி விவசாயி பலி

ஓட்டப்பிடாரம், அக்.10:    பசுவந்தனை அடுத்த சால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்லபாண்டி (35). விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு பசுவந்தனையில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் கோவில்பட்டி சாலை வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார். தீத்தாம்பட்டி அருகே சென்றபோது கோவில்பட்டியிலிருந்து வந்த கார், இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து வழக்குப் பதிந்த பசுவந்தனை போலீசார், காரை ஓட்டி வந்த கவர்னகிரியைச் சேர்ந்த முத்து மகன் பாலமுருகன் (30) என்பவரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: