விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப். 25: மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்யக் கோரி கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2400 நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கோவில்பட்டியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பஸ் நிறுத்தம் அருகே நேற்று கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், விவசாயிகள் சங்க மண்டல தலைவர் ராஜ், செயலாளர் ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் வேணுகோபால், செண்பகராஜ் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: