நாசரேத், பிப். 24: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அரசு பணிக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஜனவரி மாதம் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தமிழ் வழியில் பயின்று பின்னர் மதுரை அரசு. மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர் முத்துக்குமார், மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மற்றும் அலுவலர்கள் சாதனை படைத்த மாணவரை பாராட்டினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வின் பொன்தாஸ், ஸ்டீபன் பிரேம்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
