உடன்குடி, பிப். 27: சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை அம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆயிரத்தான் (43). பெயிண்டரான இவர், சம்பவத்தன்று குலசேகரன்பட்டினம் கோயில் தெருவிலுள்ள உறவினர் முத்து கூடலிங்கம் என்பவர் வீட்டில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனது பைக்கை தெருவில் நிறுத்தியிருந்தார். வேலை முடிந்து வெளியே வந்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணாது அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆயிரத்தான் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.
குலசையில் பைக் திருட்டு
- Kulasekharan
- உடன்குடி
- அய்ரதன்
- பன்னம்பரை
- கீழத்தெரு அம்மன் கோயில்
- சாத்தான்குளம்
- முத்து கூடலிங்கம்
- குலசேகரன்பட்டினம் கோயில் தெரு
