நாசரேத் அடுத்த பாட்டக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

நாசரேத், பிப். 21: போக்குவரத்துக்கு இடையூறாக நாசரேத் அடுத்த பாட்டக்கரை பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை பகுதியில் மெயின் ரோட்டில் கடந்த 10 நாட்களாக போக்குவரத்துக்கு இடையூறாக அதிக எண்ணிக்கையில் மாடுகள் உலா வருகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையின் நடுவே மாடுகள் நின்று கொண்டு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மறித்து குறுக்கே செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் செல்வதால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் அச்சமடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாட்டக்கரை பகுதியில் சாலையில் மாடுகள் உலா வருவதை தடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: