மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

ஏரல், பிப். 27: சாயர்புரம் அருகே உள்ள கொம்புக்காரன் பொட்டல் மேலத் தெருவை சேர்ந்தவர் சாமிதாஸ் மனைவி லீலா (83). இவருக்கு மகன், மகள் உள்ள நிலையில், இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லீலா வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது அருகில் வேலிக்காக அடைத்து வைத்திருந்த கம்பி வலையை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சாயர்புரம் போலீசார் விரைந்து வந்து லீலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாயர்புரம் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்ஐ முத்து ஆகியோர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக நடப்பட்டிருந்த இரும்பு கம்பி வழியாக மின்சாரம் வந்து அருகில் வேலிக்காக அடைத்து வைத்திருந்த இரும்பு வலையில் பாய்ந்திருப்பதும், அதனை தொட்ட மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திரப்பதும் தெரிய வந்தது.

Related Stories: