சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

சாத்தான்குளம், பிப். 24: சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம், காமராஜர் நகரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட பிரதிநிதி சித்திரை, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி துணை அமைப்பாளர் ரனீஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தேவதாஸ், ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயராமன், அன்பழகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மார்ச் 1ல் பிறந்த நாள் காணும் முதல்வரும், திமுக தலைவருமான மு,க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் இனிப்புடன் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரையை வீடு வீடாக மேற்கொள்ள வேண்டும்.

திருச்சியில் நடைபெற இருக்கும் பொது மாநாட்டில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் திரளானோர் பங்கு பெற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் அந்தோணி ஜெயசீலன், கிளை செயலாளர்கள் மகேந்திரன், மோகன் ராஜா, குமாரவேல், சித்திரை, நிர்மல், கண்ணன், ஜெகநாதன், கணபதி பாண்டி, தாமோதரன், கருப்பசாமி, முத்துக்குமார், ஜான் திலகம், அரிகிருஷ்ணன், ராஜசிங், ஜோயல், ஞானசிகாமணி, பண்டாரம், அமிர்தராஜ், அகமது சபீர், அந்தோணிகனி, சகாய ஜான்சன், அந்தோணி ராஜ், அந்தோணி முத்து, ஜெயசிங், சீயோன்ராஜ், சிவபாலன், செல்வன், தங்க புஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: