அணியாபரநல்லூரில் புதிய நவீன பால் பண்ணை திறப்பு

தூத்துக்குடி, பிப். 27: அணியாபரநல்லூரில் ரூ.46.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பால் பண்ணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் சண்முகையா எம்எல்ஏ குத்துவிளக்கேற்றினார். தமிழ்நாடு அரசின் பால் வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அணியாபரநல்லூரில் ரூ.46.65 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால் பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அணியாபரநல்லூரில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இதில் ஆவின் பொதுமேலாளர் வசந்தி, பால்வளத்துறை துணை பதிவாளர் மூர்த்தி, வட்டாட்சியர் தாஹீர் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், தாசன், வருவாய் ஆய்வாளர் பேச்சியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், திமுக தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட மகளிரணி வேலம்மாள், கிளை செயலாளர் பொன்ராஜ், பஞ். முன்னாள் தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: