கார் மோதி முதியவர் பலி

எட்டயபுரம், பிப். 25: எட்டயபுரம் அருகேயுள்ள ராஜாபட்டியை சேர்ந்த அய்யாவு(71). இவர், எட்டயபுரத்தில் இருந்து ராஜாபட்டி செல்வதற்காக மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தூத்துக்குடி சென்ற கார் மோதியதில் அய்யாவு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார், இறந்தவர் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து காரை ஓட்டிச் சென்ற ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மாரியப்பன் (42) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: