நாசரேத் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாசரேத், பிப். 26: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். பாளை. தூய யோவான் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜான் கென்னடி கலந்து கொண்டு பேசினார். 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மருத்துவத்துறையில் உயர்கல்வி, பொறியியல் துறையில் உயர்கல்வி, சட்டத்துறையில் உயர்கல்வி, அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் உயர் கல்வி ஆகியவற்றின் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் விவரங்கள், அகில இந்திய அளவிலான சட்டக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு, ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களுக்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகள் குறித்தும் விரிவாக மாணவர்கள் தெரிந்து கொண்டனர். உயர் கல்வி மற்றும் பொது அறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அண்ணா பல்கலைக்கழக மண்டல கால்பந்து பயிற்சியாளர் ஞான முத்துராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: