சாத்தான்குளம் இளைஞர்கள் தமாகாவில் இணைந்தனர்

தூத்துக்குடி, பிப். 25: சாத்தான்குளம் அடுத்த நெடுங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் முன்னிலையில் த.மா.காவில் இணைந்தனர். தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இணை செயலாளர் தங்கத்தாய் பிரபாகரன் ஏற்பாட்டில் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் சந்திரபோஸ், அன்றன் இருதயராஜா உள்ளிட்டோர் தமாகாவில் இணைந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் பெஸ்கி ராஜா, சாத்தான்குளம் நகர தலைவர் விஜய், சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் ஐயப்பன், இளைஞரணி மாவட்ட தலைவர் சிவகணேஷ் அபிஷேக், மேற்கு வட்டார தலைவர் அந்தோணி சகாயா எமல்டன், மாவட்ட துணை தலைவர் பிரேம்குமார், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி தண்டாயுதபாணி மற்றும் திருச்செந்தூர் வட்டார தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: