கட்டுமாவடி ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மணமேல்குடி, ஜூன் 5: மணமேல்குடி அடுத்த கட்டுமாவடியில் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டின் தெற்கு ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.இந்த கோயிலில் ராமநாதசுவாமி , காளியம்மன் , விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்றது. அதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் கணபதி பூஜையும், தொடர்ந்து நான்கு கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு புனிதநீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக ஏற்பாட்டை கட்டுமாவடி , கணேசபுரம், செம்பியன்மகா தேவிபட்டினம் ஆகிய மூன்று ஊர் கிராமத்தார்கள் செய்திருந்தினர்.

Related Stories: